Site icon Cinema Spice Entertainment

‘ஆரோமலே’ டிரெய்லரை வெளியிட்டார் சிம்பு: காதலுக்கான தேடலை நகைச்சுவையுடன் சொல்லும் புதிய படம்.

Aaromaley Movie Trailer Review

டிவோ மியூசிக் வெளியிட்டுள்ள இந்த இரண்டு நிமிடம் 29 வினாடிகள் ஓடும் டிரெய்லர், மூன்று முக்கிய கதாபாத்திரங்களின் காதல் வாழ்க்கையையும், அவர்களின் குழப்பங்களையும் காட்டுகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் உண்மையான காதல் எப்படி இருக்கிறது என்ற கேள்வியை இப்படம் எழுப்புகிறது. “சினிமாவில் காட்டுற மாதிரியே லவ் நமக்கும் நடக்காதாங்கிற பசங்க இருப்பாங்கல்ல அதுல இவனும் ஒருத்தன்” என்ற வசனம், படத்தின் முக்கிய கருத்தைத் தெளிவுபடுத்துகிறது.

இந்தக் கதை, “லைஃப் மேட்ரிமோனி” என்ற திருமண சேவை நிறுவனத்தைச் சுற்றி நடப்பதாகத் தெரிகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், காதலின் உண்மையான அர்த்தத்தைப் பற்றிய தேடலில் இருக்கிறார்கள். “அவங்கள கன்வின்ஸ் பண்ணி இதுதான் லவ்னு அவங்கள நம்ப வைக்கணும்” என்ற வசனம், இன்றைய தலைமுறையின் காதலுக்கான அணுகுமுறையை நகைச்சுவையாக விமர்சிப்பதுபோல் உள்ளது. ஹீரோவின் “ஐந்தாவது காதல்” தோல்வியும், அவர் “கன்வர்ஷன்ஸ் ஜீரோ” என்று புலம்புவதும், படத்தில் நிறைய காமெடி காட்சிகளுக்கு இடமிருப்பதை உறுதிப்படுத்துகிறது.

படத்தில் மிக முக்கியமான அம்சம், சிம்பு தனது சூப்பர் ஹிட் படமான விண்ணைத்தாண்டி வருவாயா (VTV) படத்தின் புகழ்பெற்ற வசனமான, “காதலை தேடிட்டு போக முடியாது, அது நிலைக்காது. அதுவா நடக்கணும், நம்மள போட்டு தாக்கணும், தலைகீழ போட்டு திருப்பணும், இதான்டா லவ்” என்ற தத்துவார்த்தமான வரியை மீண்டும் அழுத்தமாகக் கூறுகிறார். இது ரசிகர்களுக்கு VTV பட நினைவுகளைத் தூண்டி, படத்திற்கு ஒரு நம்பிக்கையான உணர்வை அளிக்கிறது.

VTV கணேஷ் மற்றும் வாலி ரீ-என்ட்ரி:

VTV படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த VTV கணேஷ் இந்தப் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் (55 வயது நிரம்பிய நாராயணன், “திருமணமாகாதவர்”) நடித்துள்ளார். காதலுக்கு உதவ முயற்சிக்கும் நாயகன் கிஷண் தாஸிடம், இவர் அஜித்தின் சூப்பர் ஹிட் படமான ‘வாலி’ படத்தின் ஒரு பிரபலாமான காட்சியை மீண்டும் நடித்துக் காட்டுவது போல வரும் ஒரு நகைச்சுவைக் காட்சி, திரையரங்கில் ரசிகர்களிடம் கைதட்டல்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாப் பாடல்களையும், காட்சிகளையும் உதாரணம் காட்டி காதலைத் தேடும் ஒரு நடுத்தர வயது மனிதரின் கதையை VTV கணேஷ் பாத்திரம் பேசுகிறது.

படக்குழு விவரங்கள்:

சமீபத்தில், நாயகனை “ஒரு ஃப்ரார்ட்” (Fraud) என்று அழைத்து குற்றம் சாட்டும் காட்சி வருகிறது. இது காதலுக்கான இந்தப் பயணத்தில் சில சிக்கல்களும், உணர்வுபூர்வமான சவால்களும் இருப்பதை உணர்த்துகிறது. சரங் தியாகு இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். எஸ். வினோத் குமார் தயாரிப்பில், அதிதி ரவீந்திரநாத் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். ‘ஆரோமலே’ திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Exit mobile version