Site icon Cinema Spice Entertainment

DC யூனிவர்ஸில் சூப்பர் கேர்ளின் அதிரடி: சூப்பர்மேன், பீஸ்மேக்கர் சோஷியல் மீடியா கணக்குகளை ‘ஹேக்’ செய்த காரா!

Supergirl movie marketing takeover

டிசி யூனிவர்ஸில் சூப்பர் கேர்ளின் அதிரடி: ‘உண்மை, நீதி… அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்!’

வழக்கமான சினிமா விளம்பரங்களை விட சற்று வித்தியாசமாக, ஒரு ‘ரெபெல்’ (Rebel) பாணியில் தனது அடுத்த படத்தின் ப்ரோமோஷனைத் தொடங்கியுள்ளது DC ஸ்டூடியோஸ். 2026-ம் ஆண்டு வெளியாகவுள்ள ‘சூப்பர் கேர்ள்’ (Supergirl) படத்திற்காக, நேற்று இரவு நடந்த சோஷியல் மீடியா களேபரங்கள் ரசிகர்களைத் திக்குமுக்காட வைத்துவிட்டன. சூப்பர்மேன் மற்றும் பீஸ்மேக்கர் போன்ற பெரிய ஹீரோக்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்குகள் திடீரென மாற்றப்பட்டன. இது ஏதோ தொழில்நுட்பக் கோளாறு அல்ல; இது சூப்பர் கேர்ளின் வருகை!

சோஷியல் மீடியா ‘ஹேக்’ நாடகம்

முதலில் மாற்றம் நிகழ்ந்தது சூப்பர்மேனின் அதிகாரப்பூர்வ ‘X’ (முன்னர் ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தான். வழக்கமாக மிகவும் கண்ணியமாக, நம்பிக்கையின் சின்னமாக இருக்கும் சூப்பர்மேனின் ப்ரொஃபைல் படம் மாற்றப்பட்டு, அதன் மேல் சூப்பர் கேர்ளின் ‘S’ சின்னம் கிராஃபிட்டி (Graffiti) முறையில் ஒட்டப்பட்டது போல மாற்றப்பட்டது.

அதுமட்டுமின்றி, பயோ (Bio) பகுதியில் இருந்த வாசகங்கள் அழிக்கப்பட்டு, “மேலே பார்க்காதீர்கள். உஷாராக இருங்கள். @Supergirl இங்கே வந்திருந்தார் 🤘” என ஒரு எச்சரிக்கை வாசகம் வைக்கப்பட்டது. தனது அண்ணன் பையனான சூப்பர்மேன் போல தான் ஒரு அமைதியான ஆள் இல்லை என்பதை, இதன் மூலம் சூப்பர் கேர்ளாக நடிக்கும் மில்லி அல்காக் (Milly Alcock) தெளிவுபடுத்தியுள்ளார்.

கழுகு vs நாய்: பீஸ்மேக்கரை வம்பிழுத்த கதை

சூப்பர்மேனை வம்பிழுத்தது கூட பரவாயில்லை, ஆனால் சண்டைக்கு பெயர் போன பீஸ்மேக்கர் (Peacemaker) கணக்கையும் சூப்பர் கேர்ள் சும்மா விடவில்லை. பீஸ்மேக்கரின் ஹெல்மெட் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதோடு, அவரது பயோவில் ஒரு நக்கலான வாசகம் சேர்க்கப்பட்டது:

“கழுகெல்லாம் ஜொள்ளு விடும்… நாய்க்குட்டி தான் கெத்து. – @Supergirl”

இது பீஸ்மேக்கரின் செல்லப் பிராணியான ‘ஈக்ளி’ (கழுகு) மற்றும் சூப்பர் கேர்ளின் வரவிருக்கும் செல்லப் பிராணியான ‘கிரிப்டோ’ (சூப்பர் டாக்) ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு ஜாலியான மோதலைக் குறிக்கிறது. இந்த இரண்டு விலங்குகளுக்கும் இடையே நடக்கப்போக்கும் கலாட்டாக்களை இது இப்போதே உறுதி செய்துள்ளது.

“உண்மை. நீதி. எதுவோ ஒன்று.” (Whatever)

இந்த சோஷியல் மீடியா கலாட்டாக்களுக்கு நடுவே, DC ஸ்டூடியோஸின் தலைவரான ஜேம்ஸ் கன் (James Gunn), படத்தின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டார். அதில் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் 26, 2026 என உறுதி செய்யப்பட்டுள்ளது.

போஸ்டரில் மில்லி அல்காக் ஒரு நீளமான கோட் (Overcoat) அணிந்து, கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, மிகவும் அலட்சியமாக நடந்து வருவது போல உள்ளது. அதன் அருகில் இருக்கும் வாசகம் தான் படத்தின் ஹைலைட்:

TRUTH. (உண்மை) JUSTICE. (நீதி) WHATEVER. (எதுவோ ஒன்று / அதெல்லாம் அப்புறம்)

வழக்கமாக சூப்பர்மேன் என்றால் “உண்மை மற்றும் நீதிக்காகப் போராடுபவர்” என்று சொல்வார்கள். ஆனால், இந்த போஸ்டரில் உள்ள “Whatever” என்ற வார்த்தை, சூப்பர் கேர்ள் உலகை காப்பாற்றுவதை விட, தனக்கென ஒரு பாணியில் வாழ நினைப்பவர் என்பதைக் காட்டுகிறது. அவர் ஒரு சாதாரண ஹீரோயின் அல்ல, வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்து வந்த ஒரு கேரக்டர் என்பதை இது உணர்த்துகிறது.

ரசிகர்களின் ரியாக்ஷன்

இந்தத் திடீர் விளம்பர உத்தியைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். “இதுதான் உண்மையான மார்க்கெட்டிங்! சூப்பர் கேர்ள் இப்போதே ஸ்கோர் செய்துவிட்டார்,” என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். குறிப்பாக அந்த கோட் அணிந்த தோற்றம் காமிக்ஸ் புத்தகங்களில் வருவது போலவே இருப்பதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மொத்தத்தில், சூப்பர்மேன் எப்படி ஒரு நம்பிக்கை நட்சத்திரமோ, அதேபோல் சூப்பர் கேர்ள் ஒரு அதிரடிப் புயலாக இருப்பார் என்பது உறுதியாகிவிட்டது. ஜூன் 2026 வரை காத்திருப்போம்!

Exit mobile version