சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான பிரம்மாண்ட அதிரடி திரைப்படமான ஜெயிலர் 2, திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களை நிறைவு செய்து சர்வதேச அளவில் வசூல் வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு அதிகாரப்பூர்வமாக “இண்டஸ்ட்ரி மெகா பிளாக்பஸ்டர்” சாதனையை எட்டியுள்ளது.
இந்த மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதளங்களில் “25 வெல்ல முடியாத நாட்கள்” என்ற வாசகத்துடன் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்தின் கம்பீரமான தோற்றத்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் அனல் பறக்கும் காட்சிகள் இப்படத்தின் பிரம்மாண்டத்தை மீண்டும் பறைசாற்றுகின்றன.
மூன்றாவது வாரத்தைக் கடந்தும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நெல்சனின் சுவாரஸ்யமான திரைக்கதை, அனிருத்தின் அதிரடியான பின்னணி இசை மற்றும் கலாநிதி மாறனின் உயர்தரத் தயாரிப்பு ஆகியவை இணைந்து ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரை விருந்தை வழங்கியுள்ளன. அத்துடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோரின் கதாபாத்திரங்கள் குடும்ப ரசிகர்களையும் திரையரங்குகளை நோக்கி ஈர்த்து வருகின்றன.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் திரையரங்குகளில் தொடர் கொண்டாட்டங்கள் நிலவி வருகின்றன. புதிய படங்களின் வருகைக்கு மத்தியிலும், வசூலில் தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்து “தலைவன் நிரந்தரம்” என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ஜெயிலர் 2.

