Site icon Cinema Spice Entertainment

போதைப்பொருள் அரக்கனைத் தோலுரிக்கும் ‘முதற்கனல்’: மே மாதம் உலகமெங்கும் வெளியீடு!

Mudhardhanal Movie Release May 2026

இளைஞர்களைச் சீரழிக்கும் போதை கலாச்சாரம்: ‘முதற்கனல்’ திரைப்படத்தின் மூலம் எச்சரிக்கும் இயக்குநர் ஆர். வெங்கட்டரமணன் – மே மாதம் ரிலீஸ்!

திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது சமூகத்தின் கண்ணாடியாகவும் இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வருகிறார் இயக்குநர் ஆர். வெங்கட்டரமணன். ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர். போத்திராஜ் DFT தயாரிப்பில் உருவாகியுள்ள ‘முதற்கனல்’ திரைப்படம், இன்றைய காலகட்டத்தின் மிகமுக்கியமான பிரச்சினையான போதைப்பொருள் பயன்பாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் வரும் மே மாதம் திரைக்கு வரத் தயாராக உள்ளது.

மதுவில் தொடங்கி போதைப்பொருள் வரை… ஏற்கனவே ‘அப்பா வேணாம்ப்பா’ என்ற படத்தின் மூலம் மதுவினால் ஒரு குடும்பம் எப்படியெல்லாம் நிலைகுலைந்து போகிறது என்பதை தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டியவர் வெங்கட்டரமணன். அதன் தொடர்ச்சியாக, மதுவை விடக் கொடிய விஷமாக மாறி வரும் ‘சிந்தடிக்’ போதைப்பொருட்கள் மற்றும் அவற்றால் இன்றைய இளைஞர்கள் படும் அவஸ்தைகளை ‘முதற்கனல்’ படத்தில் ஆழமாகப் பேசியுள்ளார்.

நிஜ வாழ்க்கையின் பாதிப்பு படம் குறித்து இயக்குநர் வெங்கட்டரமணன் பேசுகையில் மிகவும் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார்.

“போதை மீட்பு மையங்களுக்கு நான் நேரில் சென்றபோது கண்ட காட்சிகள் என்னை உலுக்கிவிட்டன. பள்ளிச் சிறுவர்கள் முதல் வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் வரை பலரும் இந்த மாய வலையில் சிக்கித் தங்களது எதிர்காலத்தையே தொலைத்துவிட்டு நிற்பதைக் கண்டேன். அந்த வலியின் வெளிப்பாடு தான் இந்த ‘முதற்கனல்’,” என்கிறார் அவர்.

மது அருந்தத் தயங்கும் சிறுவர்கள் கூட, மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் மாத்திரை மற்றும் ஊசி போன்ற போதை வஸ்துக்களுக்குத் தெரியாமல் அடிமையாகி விடுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள உளவியல் சிக்கல்கள் மற்றும் இதனால் ஒவ்வொரு குடும்பமும் சந்திக்கும் வேதனைகளை இந்தப் படம் அணு அணுவாகச் சொல்லப் போகிறது.

புதுமுகங்களின் பங்களிப்பு கதையின் நம்பகத்தன்மைக்காகப் பல புதுமுகங்களை இயக்குநர் அறிமுகப்படுத்தியுள்ளார். அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, அரிகிருஷ்ணன் என ஒரு பெரும் பட்டாளமே இதில் நடித்துள்ளனர். மேலும், இயக்குநர் வெங்கட்டரமணனும் இப்படத்தில் ஒரு வழக்கறிஞர் வேடத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றி நடித்துள்ளார்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

வணிக ரீதியான குடும்பப் படம் சமூகப் பிரச்சினையைப் பேசினாலும், இது போரடிக்கும் படமாக இருக்காது என இயக்குநர் உறுதி அளித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும் வகையில் கமர்சியல் அம்சங்கள் நிறைந்த ஒரு குடும்பப் படமாகவே இது செதுக்கப்பட்டுள்ளது.

தவறான பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வாகவும் அமையப்போகும் இந்த ‘முதற்கனல்’, மே மாதம் முதல் திரையரங்குகளில் கனலாய் வீசத் தொடங்கும்.

Exit mobile version